20 உலக மொழிகளில் மணிமேகலை மொழிபெயர்ப்பு

Must read

சென்னை:
லக மொழிகளில் மணிமேகலை மொழிபெயர்ப்பு செய்யும் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.

திருக்குறள் நூல் இந்திய, ஆசிய மற்றும் ஐரோப்பிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் 22 இந்திய மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்த்து வருகிறது.

இந்நிலையில், உலக மொழிகளில் மணிமேகலை மொழிபெயர்ப்பு செய்யும் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனம் தெரிவிக்கையில், திருக்குறளை அடுத்து உலக மொழிகளில் மணிமேகலையை மொழிப்பெயர்ப்பு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், சிங்களம், மலாய், பர்மீஸ் உள்பட 20 உலக மொழிகளில் மணிமேகலை மொழிபெயர்ப்பு செய்யப்பட உள்ளது என்றும் கூறியுள்ளது.

More articles

Latest article