திரிபுரா:
திரிபுராவின் புதிய முதல்வராக பாஜகவை சேர்ந்த மாணிக் சாகா இன்று காலை பதவியேற்றார்.

2018ல் இருந்து திரிபுரா முதல்வராக இருந்த பாஜகவை சேர்ந்த பிப்லாப் குமார் தேவ் சில நாட்களுக்கு முன்பு ராஜினாமா செய்தார். அங்கு இன்னும் 8 மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது.

இந்நிலையில், திரிபுராவின் புதிய முதல்வராக பாஜகவை சேர்ந்த மாணிக் சாகா இன்று காலை பதவியேற்றார். இவருடன் புதிய அமைச்சர்களும் மீண்டும் பதவி ஏற்றனர்.