சென்னை: மாண்டல் புயல் காரணமாக  உள்பட 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

வங்கக்கடலில் தென்கிழக்கே சுமார் 350 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. மாண்டஸ் புயல் இன்று இரவு மாமல்லபுரம் அருகே  கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது . தற்போது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து வரும் இந்த புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 65 கி.மீ. முதல் 85 கி.மீ. வரை வேகத்தில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

இதற்கிடையே, மாண்டஸ் புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 350 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.  புயல் காரணமாக நேற்று இரவு சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியது. இன்று காலையும் விட்டு விட்டு பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால்  சென்னை  24 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இதேபோல் புதுச்சேரி, காரைக்காலிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.

மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.