சென்னை:
ண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் ஆகம விதிப்படி புனரமைக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்திப் பெற்ற திருத்தலம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். பெண்கள் இந்தக் கோயிலில் பொங்கலிட்டு வழிபட்டால் திருமணம் கைகூடும்; அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். கேரளம் மாநிலத்திலிருந்து ஏராளமான பெண்கள் 41 நாள்கள் விரதமிருந்து, இருமுடி கட்டி இந்தக் கோவிலுக்கு வருவதால், `பெண்களின் சபரிமலை என்று சிறப்பித்து அழைக்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்நிலையில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் ஆகம விதிப்படி புனரமைக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை வடபழனி முருகன் கோயிலில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்ட அவர், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது என்றும், சிலர் மட்டுமே வேண்டுமென்றே அரசை குறைகூறி வருவதாகவும் சாடினார். கருத்து வேறுபாடின்றி ஒற்றை தலைமையில் ஆட்சி நடப்பதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.