கோவை:  கோவை மாவட்ட நீதிமன்ற வளாகம் இன்று காலை பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தபோது, மர்ம நபர் ஒருவர் பெண்மீது ஆசிட் அடித்துவிட்டு ஓடினார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கிருந்த பொதுமக்கள், வழக்கறிஞர்கள் என பலரும் அங்கிருந்து அலறியடித்துக்கொண்டு ஓட்டம் புடித்தனர். ஏற்கனவே கடந்த மாதம் இதுபோல நீதிமன்றம் அருகே இருவர்மீது கொலை வெறி தாக்குதல்நடத்தப்பட்டதும், ஒருவர் உயிரிழந்ததும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று ஆசிட் வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது.

கோவை மாவட்ட நீதிமன்றம் வழக்கம் போல் இன்றும் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்தது. அப்போது திடீரென யாரும் எதிர்பாராத விதமாக கவிதா என்ற பெண் மீது அவரது கணவர் ஆசிட் வீசி தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலில் காயமடைந்த கவிதா அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த  ஆசிட் வீச்சு சம்பவத்தை தடுக்க முயன்ற வழக்கறிஞர் மீதும் ஆசிட் பட்டதில் அவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

நீதிமன்ற வளாகத்திலேயே நடைபெற்ற இப்பரபரப்பு சம்பவத்தை தொடர்ந்து  ஆசிட் வீசியரை அங்கிருந்த பொதுமக்கள், வழக்கறிஞர்கள் பிடித்து அடித்து உதைத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.  இதையடுத்து,  நீதிமன்றத்தில் தகுந்த பாதுகாப்பு வழங்க கோரி வழக்கறிஞர்கள் தொடர்ந்து காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கா நீதிமன்ற வளாகத்தின் முன்னுள்ள முக்கிய சாலையில் வழக்கறிஞர்கள் கூடியதால் அப்பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோவை மாநகர காவல் துணை ஆணையர் சந்திஷ் நேரடியாக விசாரணை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஆசிட் வீச்சு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்றது குற்றவாளி தண்ணீர் கொண்டு வரும் பாட்டிலில் சாதாரணமாக ஆசிட்டை எடுத்து வந்துள்ளார். முழுமையான விவரங்கள் விசாரணைக்கு பின்னே தெரியவரும் என்றார். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவரும் கணவன் மனைவி என்பது தெரிய வந்துள்ளது என்றார். பட்டப் பகலில் ஏராளமானோர் வந்து செல்லும் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் பரபரப்பான சூழலை  ஏற்பட்டது.

ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன் கோவை நீதிமன்ற வளாகம் அருகே கொலை நடந்த நிலையில் தற்போது பெண் மீது ஆசிட் வீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.