கோவில்பட்டி: தமிழ்நாடு பாஜக பட்டியலின பிரிவு தலைவரின் கோவில்பட்டி வீட்டடல் அமலாக்கத்துறையில் இன்று திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு பாஜகவில் பட்டியலின பிரிவு தலைவராக இருப்பவர் சிவந்திநாராயணன். இவர் கோவில்பட்டி ராஜீவ் நகர் 6-வது தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், இன்று காலை திடீரென அவரது வீட்டுக்கு வந்த  சென்னையில் இருந்து 5 அதிகாரிகள் கார் மூலம் வந்த  அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரது வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.  காலை  7 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை தற்போதுவரை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

அவரது மனைவியிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் தொடர்ந்து வீட்டில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், எதற்காக இந்த சோதனை என்பது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கூற மறுத்துவிட்டனர்.

அமலாக்க பிரிவினர் சோதனையில் ஈடுபட்டதை அறிந்த பாஜகவினர் சிவந்தி நாராயணன் வீடு முன்பு திரண்டனர். அவர்கள் சோதனை நடத்த வந்த அதிகாரியிடம் பேசினர். ஆனால் அவர்களுக்கும் அதிகாரிகள் தகவல் சொல்ல மறுத்து விட்டனர். இந்த  சோதனை நடந்த போது பா.ஜனதா பட்டியலின மாநில பொதுச்செயலாளர் சிவந்திநாராயணன் வீட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.