உடலுக்குத் தீங்கான கதிர்வீச்சு- செல்போன் கோபுர  செயல்பாட்டை நிறுத்த உச்சநீதிமன்றம் ஆணை…

Must read

டில்லி,

மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் வசித்துவரும் ஹரீஸ் சந்த் திவாரி என்பவர், கடந்த 2002 ம் ஆண்டு தனது வீட்டருகே சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட பி எஸ் என் எல் செல்போன் கோபுரத்திலிருந்து  உடலுக்குத் தீங்கிழைக்கும் எலெக்ட்ரோ மேக்னெட்  கதிர்வீச்சு வெளியேறி தனக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது.

அதனால்  அந்த செல்போன் கோபுரத்தின் செயல்பாட்டை முடக்கவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ரஞ்சன்கோகாய், நவின் சின்ஹா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,  உடலுக்குத் தீங்கை ஏற்படுத்தும் அந்த BSNL செல்போன் கோபுரத்தின் செயல்பாட்டை  7 நாட்களுக்குள் முடக்கவேண்டும் என உத்தரவிட்டனர். 

செல்போன் கோபுரத்துக்கு எதிராக முதல்முறையாக தனிநபர் ஒருவர் தொடர்ந்த வழக்கு வெற்றிப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த அக்டோபர் மாதம் உச்சநீதிமன்றத்தில் அபிடாபிட் தாக்கல் செய்த மத்திய தொலைத் தொடர்புத் துறை, நாட்டில் 12 லட்சம் மொபைல் போன் கோபுரங்கள் பொருத்தப்பட்டிருப்பதாகவும், இவற்றில் சுமார் மூன்றரை லட்சம் கோபுரங்களின் செயல்பாடுகளை மட்டுமே கதிர்வீச்சின் அளவை ஆய்வு செய்திருப்பதாகவும், மொத் தத்தில்  212 கோபுரங்களிலிருந்து மட்டுமே அதிகளவில் கதிர்வீச்சு  நடைபெறுவதாக தெரிவித்தது.

அதேநேரம்  செல்போன் கோபுர கதிர்வீச்சால் உடல்ரீதியில் எந்தப்பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை என்றும் கூறியுள்ளது.

 

More articles

Latest article