நடிகர் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் டீசர் நவம்பர் 14 ஆம் தேதி தீபாவளி அன்று வெளியானது .

மாஸ்டர் டீசர் வெளியான 16 மணி நேரத்தில் 16 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருப்பதாகவும், 1.6 மில்லியன் லைக்ஸ்களைப் பெற்றிருப்பதாகவும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது .

இந்நிலையில் ஏற்கனவே கொரியன் திரைப்படமான சைலன்ஸ்ட் திரைப்படத்தின் காப்பி என சொல்லப்பட்ட மாஸ்டர் டீசரில் இடம்பெற்றிருந்த சில காட்சிகளை வைத்து இந்த படம் மலையாளத்தில் மம்மூட்டி நடித்த மாஸ்டர் பீஸ் என்ற படத்தின் காப்பி என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.