பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘தெகிடி’, ‘அட்டகத்தி’, ‘இன்று நேற்று நாளை’ உள்ளிட்ட பல வரவேற்பு பெற்ற படங்களைத் தயாரித்தவர் சி.வி.குமார்.

தற்போது சி.வி.குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்துக்கு ‘கொற்றவை’ எனப் பெயரிட்டுள்ளது படக்குழு.

இதில் ராஜேஷ் கனகசபை, டேனியல் பாலாஜி, வேலு பிரபாகரன், அனுபமா குமார் உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். ஒளிப்பதிவாளராக பிரகாஷ் ருத்ரா, எடிட்டராக அஸ்வின் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

டிசம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.