மேமோகிராம்கள்: இதய நோய் கண்டறிய உதவும்

Must read

Vaishnavi Rajmohan
Vaishnavi Rajmohan is a biotechnologist by profession and a rationalist by practice. Her writing interests include literature, social and scientific articles.

MAMMO 0
மேமோகிராம்கள் இதய நோய் கண்டறிய உதவ முடியும் மார்பக புற்றுநோய் மேல் உள்ள பயம் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கானப் பெண்களை மேமோகிராமின் உதவியை நாடிச் செல்ல நிர்ப்பந்திக்கிறது, ஆனால் இந்த வழக்கமான சோதனை ஒரு பெரிய உயிர்கொல்லி நோயான இதய நோயைக் கூடத் தடுக்க முடியும். அதாவது இந்த வழக்கமான சோதனை பல்லாயிரக்கணக்கானப் பெண்களை மாரடைப்பு மற்றும் பக்கவாதத்திலிருந்து கூட தடுக்க ஒரு வழியாக அமையும். இது ஆரோக்கியத்தை பாதுகாக்க செலவை மிச்சப்படுத்தும் வழியாகவும் இருக்கலாம், ஏனெனில் பெண்கள் இந்த மார்பக புற்றுநோய் சோதனையை வழக்கமாகக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
mammo1
அமெரிக்கன் கார்டியாலஜி கல்லூரியின் 65 வது வருடாந்திர அறிவியல் அமர்வில் இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் வழங்கப்பட்டு கார்டியோவாஸ்குலார் இமேஜிங் என்ற பத்திரிகையில் மார்ச் 24 வெளியிடப்பட்டன. பல தீங்கற்ற கட்டிகளால் மார்பகத் திசுவின் இரத்த நாளங்களில் பொதுவாக பெண்களுக்கு கால்சிஃபிகேஷன் ஏற்படும். இந்த பிளெக்ஸ் கொரொனெரி ஆர்டரியிலும் வளரும், ஆனால் இந்த இடத்தில் அவை பாதிப்பில்லாதவை ஏனெனில் அது பெரும்பாலும் இதய நோய்க்கான ஒரு சமிக்ஞை என்பதால். தமனியின் சுவர்களில் கொழுப்பு மற்றும் பிளெக்ஸ் படிவதால் ஏற்படும் மார்பக தமனி கால்சிஃபிகேஷன், இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு நோய்க்கான ஆரம்ப அறிகுறியாக MAMMO 4ஆரய்ச்சியில் கண்டறியப்பட்டது.
இந்த ஆய்வில் 292 பெண்கள் டிஜிட்டல் மேமோகிராஃபியை மேற்கொண்டார். மார்பக தமனி கால்சியமேற்றல் இருந்த 70 சதவீத பெண்களுக்கு கரோனரி தமனி கால்சியமேற்றலும் இருந்ததினால் அவர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருவதற்கு சாத்தியம் அதிகம் என்பதால் அவர்கள் கண்காணிக்கப்பட வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிதுள்ளானர். (மார்பில் நான்-கான்ட்ராஸ்ட் CT ஸ்கேன் மூலம் பெண்களுக்கு கரோனரி தமனி கால்சியமேற்றலுக்கான மதிப்பீடு செய்யப்பட்டது.) மார்பக தமனி கால்சியமேற்றல் கொண்டிருந்த 60 வயது கீழ் உள்ள பெண்களில் பாதிபேருக்கு கரோனரி தமனி கால்சியமேற்றலும் இருந்தது என்பது மருத்துவர்களுக்கு மேமோகிராஃபியைப் பயன்படுத்தி வாழ்க்கையில் சீக்கிரமே இதய நோயைக் கண்டறிய முடியும் என்று காட்டியது.
MAMMO 3மேமோகிராஃபியைப் பயன்படுத்தி ஒரு பெண்ணிற்கு இதய நோய் மதிப்பீடு செய்யும் போது மிகவும் குறிப்பிடத்தக்க அளவிலேயே சில தவறான முடிவுகள் இருந்தன. ஒவ்வொரு ஆண்டும், அமெரிக்காவில் சுமார் 4o,450 பெண்கள் மார்பக புற்றுநோயால் இறந்தாலும், அது பெண்களை அதிகமாகக் கொல்லும் நோய்களின் பட்டியலில் இல்லை என அமெரிக்கன் கேன்சர் சொசைட்டி கூறுகிறது. பெரும்பாலான பெண்கள் இதய நோயிற்கு தான் பயப்பட வேண்டும் ஏனெனில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆண்டுதோறும் 292,000 க்கும் மேற்பட்ட அமெரிக்க பெண்களின் உயிரை எடுக்கின்றது. எனினும், பல பெண்கள் தங்கள் இதய ஆரோக்கியத்ட்கிற்கு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவதில்லை. அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் படி நாடுகளின் மையங்களின் படி, இதய நோய் தான் பெண்களின் சாவிற்கு முக்கிய காரணமாக உள்ளது என்று 54 சதவிகிதம் பெண்களுக்குத் தெரியும்.
MAMMO 2
நோயாளியைப் பற்றி அடிப்படை மதிப்பீடு அதாவது இரத்த அழுத்தம் கண்டறிதல் மற்றும் குடும்ப வரலாறு பற்றி ஆராய்தல் போன்றவை செய்த பிறகு தேவை ஏற்படும் வரை ஆரம்ப நிலை மருத்துவர்கள் பொதுவாக நோயாளிகளுக்கு இதய நோயிற்காகத் தீவிர சோதனைகள் நடத்துவதில்லை. சுகாதார நிபுணர்கள், மார்பக புற்று நோய் வருவதற்கு சராசரி ஆபத்து கொண்ட 50 -74 வயதுக்குட்பட்ட பெண்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மேமோகிராம்கள் செய்துகொள்ள தற்போது பரிந்துரைக்கின்றனர். பெண்கள் ஹார்ட் பவுண்டேஷன் படி, அமரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 435,000 பெண்களுக்கு மாரடைப்பு வருகிறது, அதில் 83,000 பெண்கள் 65 வயதுக்கு கீழும் 35,000 பெண்கள் 55 வயதுக்கு கீழும் உள்ளனர்.

More articles

Latest article