இந்திய-பங்களாதேஷ் அணை ஒப்பந்தம்: மமதா பானர்ஜி எதிர்ப்பு

Must read

.

கல்கத்தா:
இந்திய-பங்களாதேஷ் இடையில் ஓடும் கங்கையில் அணைகட்டும் ஒப்பந்தத்துக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பங்களாதேஷ் மக்களின் தண்ணீர்ப்பற்றாக்குறையை தீர்ப்பதற்காக மட்டும் அல்லாது வடக்கு மற்றும் தெற்கு பங்களாதேஷை இணைக்கும் திட்டம் என்பதால் அந்நாட்டு அரசு கங்கை நதியின் குறுக்கே அணையை கட்ட மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இந்தியா-பங்களாதேஷ் இடையில் ஓடும் கங்கையில் அணை கட்டுவது தொடர்பாக இருநாடுகளும் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன.
மேற்குவங்கத்திலும் கங்கை ஓடுவதால் அதன் முதலமைச்சரின் சம்மதம் பெறவேண்டிய சூழல் உள்ளது. இந்நிலையில் இந்த ஒப்பந்தம் குறித்து ஆற்று நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, பங்களாதேஷில் கங்கையின் குறுக்கே அணை கட்டினால் மேற்குவங்கத்தில் இருக்கும் முர்ஷிதாபாத் மற்றும் நாடியா மாவட்டங்களில் கடும் வெள்ளப்பெருக்கு பெரும் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி அத்திட்டத்திற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்

More articles

Latest article