டில்லி,

டில்லியில் வீடு அருகில் விளையாடிகொண்டிருந்த சிறுவன் மீது கார் மோதியது. இதில் படுகாய மடைந்த சிறுவனை மருத்துவமனைக்கு எடுத்துச்செல்வதாக கூறி சுமார் 5 மணி நேரம் சுற்றிய தால் அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

டில்லியின் வடமேற்கு பகுதியில் உள்ளது. முகர்ஜிநகர். கடந்த வெள்ளிக்கிழமையன்று அந்த பகுதியை சேர்ந்த ரோகித் என்ற சிறுவன் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வழியாக வந்த கார் ரோகித் மீது மோதியது.

இதில் ரோகித்குமார் பலத்த காயமடைந்தான். இதையறிந்த சிறுவன் தாய் வசந்தி பதறியடித்து ஓடி வந்தார். அவர்களிடம் டாக்சி டிரைவர் ரோகித், இது குறித்து யாரிடமும் எதுவும் சொல்ல வேண்டாம்.. என கூறி, குழந்தையை  உடனே மருத்துவமனைக்கு எடுத்து செல்லலாம் என்று கூறி, காயமடைந்த ரோகித் குமாரையும், ரோகித்தின் தாயான வசந்தியையும் காரில் கூட்டிக்கொண்டு சென்றார்.

எய்ம்ஸ் மருத்துவமனை, இந்து ராவ் மருத்துவமனைக்கு உள்பட பல மருத்துவமனைக்குள் சென்றுவிட்டு,  இங்கே அனுமதிக்க மறுக்கிறார்கள், வேறு மருத்துவமனை செல்லாம் என்று சொல்லிச்கொண்டு சுமார் 5 மணி நேரம் காரிலேயே சுற்றியுள்ளார்.

இதற்கிடையில், விபத்து குறித்து தனது கணவருக்கு சொல்லலாம் என்று நினைத்த வசந்தி, அவசரத்தில் வந்ததால் செல்போன் எடுத்து வரவில்லை. இதனால் விபத்து குறித்து தனது கணவருக்கு தகவல் தெரிவிக்க முடியவில்லை.

இதைத்தொடர்ந்து அவர்களை காரில் இருந்து வீட்டில் இறக்கிவிட்டு கார் டிரைவர் சென்று விட்டார்.

அதன்பின்னர், சுமார் 6 மணி அளவில் தனது கணவருடன்  ரோகித்தை வேறொரு மருத்துவ மனைக்கு தூக்கிச்சென்றனர்.

ஆனால், மருத்துவமனை நிர்வாகமோ, மிகவும் தாமதாமாக கொண்டுவந்ததால் ரோகித் இறந்து விட்டதாக கூறியது.

இதன்காரணமாக அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுகுறித்து இரவு 9 மணி அளவில்  போலீசில் புகார் கொடுத்தனர்.

போலீசார்  விரைந்து  சென்று விபத்து ஏற்படுத்திய கார்  டிரைவரை அவரது இல்லத்தில் கைது செய்தனர். மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.