கொல்கத்தா

மிழ்நாட்டில் உள்ள அம்மா உணவகம் போல மேற்கு வங்கத்திலும் உணவகங்கள் திறக்க முதல்வர் மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த 2013ஆம் வருடம் முன்னாள் பிரதமர் ஜெயலலிதா அம்மா உணவகம் என்னும் பெயரில் மலிவு விலை உணவகங்களை அரசு சார்பில் நடத்த தொடங்கினார்.    அதன் பிறகு அந்த திட்டம் ஒரிசாவிலும், கர்னாடகத்திலும் அரியானாவிலும் பரவியது.    இந்த திட்டங்கள் அனைத்து மாநிலங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது இதே வழியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளார்.   “எகுஷே அன்னபூர்ணா”  என வங்காளத்தில் பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தில் மலிவு விலையில் மீனுடன் கூடிய சாப்பாடு ரூ. 21க்கு வழங்கப்பட உள்ளது.   இந்த திட்டத்தின் கீழ் சைவ சப்பாடு ரூ.10 க்கு வழங்கப்படும் எனவும் வரும் மே மாதம் 1 ஆம் தேதி முதல் இத்திட்டம் தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

இந்த மீன் சாப்பாடு குறித்து மேற்கு வங்க மீன்வளத்துறை அமைச்சர் சந்திரநாத் சின்ஹா, “இந்த சாப்பாட்டில், அரிசி, குழம்பு, காய்கறிகள், மீன் மற்றும் சட்னி ஆகியவை இருக்கும்.   ஒரு சாப்பாட்டின் விலை ரூ. 21 ஆக இருக்கும்.     நகரில் உள்ள பல ஏழைகளுக்கு இது ஒரு நல்ல திட்டமாகும்.   இந்த திட்டம் முதலில் கொல்கத்தா நகரில் மட்டுமே அமுல்படுத்தப்பட உள்ளது.   வேன்களின் மூலம் நகரின் பல பகுதிகளில் உணவு விற்கப்பட உள்ளது.   இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து மாநிலம் எங்கும் விரிவாக்கப்பட உள்ளது.” என தெரிவித்துள்ளார்.