இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் மாமனிதன் . தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் சீனு ராமசாமி இணையும் மூன்றாவது படம் இது.

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காய்த்ரி நடித்துள்ளார். இந்த படத்திற்கு முதன் முதலாக இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு 2019-ம் ஆண்டே முடிவடைந்த நிலையில், ஒரு சில காரணங்களால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது திரைப்படத்திற்கான முதல் பாடல் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.