மலேசியா :

 

சிலாங்கூரைச் சேர்ந்த 41 வயது மதிக்க தக்க மலேசியர், தொழில் நிமித்தமாக சிங்கப்பூர் சென்று வந்ததாகவும். அங்கே சில சீனாவை சேர்ந்த பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மலேசியா திரும்பியதாக தெரிகிறது.

காய்ச்சல் மற்றும் சளி இருமல் காரணமாக தனியார் மருத்துவமனையை அணுகிய அவருக்கு கொரோனா வைரஸ் பாதித்திருப்பது சோதனைக்கு பின் தெரியவந்துள்ளது.

மலேசியா நாட்டு சுகாதார அமைச்சர் டத்துக் செரி டாக்டர் துல் கிஃப்ல் அஹ்மத் – நன்றி : thestar

 

 

கொரோனா வைரஸ் : ஒரே நாளில் 64 பேர் பலி, இதுவரை மொத்தம் 427 பேர் பலி !!! நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை !!

மலேசியாவில் இதுவரை 10 பேர் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு வந்ததாகவும், அதில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்த பட்டதாகவும் இவரே கொரோனா வைரஸ் பாதித்த முதல் மலேசியர் என்றும் தெரிகிறது.

இது தவிர, சீனாவில் இருந்து மலேசியா வந்த ஒரு சீனருக்கும் கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தகவலை மலேசியா நாட்டு சுகாதார அமைச்சர் டத்துக் செரி டாக்டர் துல் கிஃப்ல் அஹ்மத் தெரிவித்தார்.