ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்ப்பை பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் முக்கியமான நிகழ்ச்சி பிக் பாஸ்.

முதலில் ஹிந்தியில் வெளியானது.அதைத் தொடர்ந்து கடந்த நான்கு வருடங்களாக தென்னிந்தியாவிலும் அறிமுகமானது.

தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியான இந்த நிகழ்ச்சியில் தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்க மலையாளத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

பிக் பாஸ் மலையாளம் மூன்றாம் சீசன் கொரோனா லாக்டவுனிலும் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் பிக் பாஸ் குழுவினர் ஆறு பேருக்கு கொரோனா பாதிப்பு வந்ததாக செய்திகள் வெளிவந்தது. இதனால் ஷோவை நிறுத்தி செட்டுக்கு சீல் வைத்தனர் தமிழ்நாடு அரசு அதிகாரிகள்.

இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று பற்றிய தகவல் இன்று வெளியாகியுள்ளது.சூப்பர் ஸ்டார் மோகன்லால் தொகுத்து வழங்கும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிய ப்ரோமோ இன்று வெளியானது.

https://youtu.be/nwSLubMkt3U