நாடெங்கும் கொரோனா தொற்றால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை, அதிகாரிகள் தனிமைப்படுத்தி வருகின்றனர். நோய் தொற்று பரவாமல் தடுக்க, இதை செய்து வருகின்றனர்.

இந்த சூழலில் பிரபல பாலிவுட் நடிகை மலைகா அரோரா, மும்பை பாந்த்ரா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனது மகன் அர்ஹானுடன் வசித்து வருகிறார். இவர் வசிக்கும் இடம் கன்டைன்மென்ட் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இவரது குடியிருப்பில் உள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது . இதனையடுத்து , மொத்த குடியிருப்பையும் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.