சென்னை

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டி இடுகிறது.

சென்ற ஆட்சியில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட போது அதற்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படவில்லை.,  இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த 9 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிட்டது.  அதன்படி தேர்தல் ஆணையம்  அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.

அதன்படி வரும் அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளன.    திமுக காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி தொடரும் நிலையில் அதிமுக கூட்டணியிலிருந்து பாமக விலக உள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தனது டிவிட்டரில்,

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடுகிறது. 9 மாவட்டங்களிலும் பரப்புரைப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். களத்தில் சந்திப்போம். வெற்றி நமதே.

எனப் பதிவிட்டுள்ளார்.