மக்கள் நீதி மய்யத்தின் மற்றொரு அங்கம் பிக் பாஸ்

Must read

மக்கள் நீதி மய்யத்தின் மற்றொரு அங்கம் பிக் பாஸ்

பெரும் எதிர்பார்ப்போடு தனது”மக்கள் நீதி மய்யம்” கட்சியைக் கமல் துவக்கினார்!

ஊடகங்களும் அவருக்குப் பேராதரவு தந்தன! கமலும் உற்சாகத்தோடு, உடனடியாக அப்போது (2019) நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் தனித்துப் போட்டி இட்டார்! முடிவுகள்  அவருக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்தன!

இதைத் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலில் சில கட்சிகளோடு களம் கண்டார்…. முடிவில் கடும் ஏமாற்றத்தைச் சந்தித்தார்! அவரே கோவை தெற்கில் தோற்றுப் போனார்!

இப்போது அவருக்கு ” பிக் பாஸ் ” சீசன் தொடங்கி உள்ள நிலையில், அதில் முழுக் கவனம் செலுத்திய படியே 9 மாவட்டங்களில் மீண்டும் தனது கட்சியைக் களத்தில் இறக்கினார்! ஆனால், பிரச்சாரக் களத்தில் அவரைக் காணோம்!

 இந்த முறை, மிக மோசமான தோல்வியை மக்கள் அவருக்குத் தந்துள்ளார்கள்!

எந்தப் பிரச்சனையும் தெளிவில்லை… மக்களைத் தேடி அவர் செல்லவில்லை! அதற்கான உழைப்பும் அவரிடம் இல்லை!

எனவே, “பார்ட்  டைம்” அரசியல் செய்யும் கமல்ஹாசனின் “மய்யத்” துக்கு மக்கள் பலத்த அடியைத் தந்துள்ளனர்!

தற்போது அவர், ” வீரிய வீச்சோடு செயல்படுவோம்” என்று முழங்கி இருக்கிறார்!

மக்களோ, ” பிக் பாஸ்” நிகழ்ச்சியின் ஒரு அங்கமாகவே இதனைப் பார்க்கிறார்கள்!

நன்றி : ஓவியர் இரா. பாரி

More articles

Latest article