சென்னை:
காத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி தலைநகர் டில்லி ராஜ்காட்டில் அமைந்துள்ள  உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உள்பட அரசியல் கட்சித்தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.  மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள காந்திசிலைகளுக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

டில்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.