புதுடெல்லி: ஜிஎஸ்டி வருவாய் தொடர்ந்து மூன்றாவது மாதமாக குறைந்துள்ளது என்று மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டின் செப்டம்பர் மாத வருவாய் ரூ.91,916 கோடிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய ஆகஸ்ட் மாத வருவாய் ரூ.98,202 கோடிகள். அதேசமயம், கடந்த 2018ம் ஆண்டின் செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ.94,442 கோடிகள்.

இந்தாண்டு செப்டம்பரில் வசூலான ஜிஎஸ்டி வருவாய் ரூ.91,916 கோடியில், சிஜிஎஸ்டி தொகை ரூ.16,630 கோடிகள். எஸ்ஜிஎஸ்டி தொகை ரூ.22,598 கோடிகள்.

ஐஜிஎஸ்டி தொகை ரூ.45,069 கோடிகள் மற்றும் வரி ரூ.7,620 கோடிகள் என்று விரிவான தகவலை வெளியிட்டுள்ளது மத்திய நிதி அமைச்சகம்.

கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான காலகட்டத்தில் உள்நாட்டு அம்சம் 7.82% வளர்ச்சியடைந்துள்ளது. அதேசமயம் ஜிஎஸ்டி தொடர்பான ஏற்றுமதியில் எதிர்மறையான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.