மகாராஷ்டிரா காவல்துறை, ஒரு சக நீதிபதியைத் தற்கொலைக்கு தூண்டியதாக்க் கூறப்படும்   ஐந்து நீதிபதிகள் எதிராக குற்றவியல் வழக்கு தாக்கல் செய்துள்ளது.
maharastra court 1
திரு ஜாவல்கர் 2004 ல் சிவில் நீதிபதி ஜூனியர் பிரிவில் பணியில் சேர்ந்து 2012 ல் ஒரு கூடுதல் நீதிபதியாக பதவி உயர்த்தப் பட்டிருந்தார்.
அவர் யவத்மாலில்  உள்ள தர்வா  சிவில் நீதிபதி மூத்த பிரிவு மற்றும் கூடுதல் முதன்மை நீதிபதியாக பணியில் இருந்தார்.
கடந்த  மார்ச் 6 ம் தேதி,   அனுப் ஜாவல்கர் சந்தர்  ரயில்வேயில் மஞ்சர்கெட் ரயில் தடங்களில் சடலமாகக் கிடந்தார்.
அவர் வீட்டில் சோதனையிட்ட போது மீட்கப்பட்ட தற்கொலைக் குறிப்பில் பல மூத்த நீதித்துறை அதிகாரிகளின் பெயர் இடம் பெற்றுள்ளது.
அமராவதி (கிராமப்புற) போலீஸ் இன்ஸ்பெக்டர் கிரிஷ் பாப்டே பத்திரிக்கையாளர்களிடம் கூறும்போது, “ யாவத்மால் மாவட்ட முதன்மை மற்றும் செசன்ஸ் நீதிபதி டாக்டர் ஷிரசா, மாநில சட்ட உதவி ஆணையம் உறுப்பினர் எஸ்.எம் அகர்கர், முதன்மை நீதிபதி ஆர்.பி. தேஷ்பாண்டே, சிவில் நீதிபதி (சிரேஷ்ட பிரிவு) டி.என் கட்சே மற்றும் சிவில் நீதிபதி எச்.எல் மன்வர்  மீது பிரிவு 306 (தற்கொலைக்கு காரணமான உடந்தை) மற்றும் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 34  கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.