மும்பை

காராஷ்டிரா மாநிலத்தில் வரும் மார்ச் மாதம் முதல் முக கவசம் தவிர மற்ற அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் நீக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் பரவல் உலகெங்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.  இதனால் இந்தியாவில் மூன்றாம் அலை பாதிப்பு ஏற்பட்டது.   நாடெங்கும் இந்த பாதிப்பு அதிமாக இருந்த போதிலும் மகாராஷ்டிர மாநிலத்தில் மிகவும் அதிக அளவில் காணப்பட்டது.  இதையொட்டி அங்கு கடும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன.

கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.  அவ்வகையில் மகாராஷ்டிர மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்து காணப்படுகிறது.  சுமார் 22 மாதங்களுக்குப் பிறகு மும்பையில் தினசரி பாதிப்பு இரண்டு இலக்கத்தை எட்டி உள்ளது.  கடந்த 17 ஆம் தேதி முதல் இங்கு 100க்கும் குறைவன பாதிப்பே ஏற்படுகிறது.  இது மக்களுக்கு மகிழ்வை ஏற்படுத்தி உள்ளது. 

நேற்று மகாராஷ்டிர மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோப்,

“மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு வேகமாகக் குறைந்து வருகிறது.  எனவே வரும் மார்ச் மாதத்தில் அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. முகக் கவசம் அணிவது மட்டும் தொடரும்.  ஏற்கனவே மத்திய அரசு கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு ஏற்படுத்த வலியுறுத்தி உள்ளது.  இந்த நீக்கத்துக்கு மாநில கொரோனா தடுப்பு குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது”

எனத் தெரிவித்துள்ளார்.