மகாராஷ்டிராவில் 5,011 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு: 100 பேர் பலி

Must read

மும்பை: மகாராஷ்டிராவில் இன்று 5,011 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: புதியதாக 5,011 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,57,520 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் கொரோனாவால் 100 பேர் பலியாக, ஒட்டு மொத்த உயிரிழப்பு 46,202 ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 6,608 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.தற்போது மருத்துவமனைகளில் 80,221 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

More articles

Latest article