மும்பை: மராட்டிய மாநிலத்தில், மீண்டும் பகுதிநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதற்கு, தொழிலதிபர் அனில் அம்பானியின் மகன் அன்மோல் அம்பானி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மராட்டியத்தில், கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருப்பதால், அங்கு பகுதிநேர ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலதிபர் அனில் அம்பானியின் மூத்த மகன் அன்மோல் அம்பானி, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “நடிகர்கள் இரவு நேரங்களில் படப்பிடிப்பு நடத்தலாம், கிரிக்கெட் வீரர்கள் இரவு நேரத்தில் விளையாடலாம், அரசியல்வாதிகள் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் பேரணிகள் மற்றும் ஊர்வலங்கள் நடத்தலாம்.

ஆனால் மக்களுடைய வாழ்வாதார தொழில் என்பது அரசுக்கு அத்தியாவசியமாக இல்லை. இந்த ‘அத்தியாவசியம் இல்லாத’ தொழில்கள்தான், இந்த சமூகத்தினுடைய பொருளாதாரத்தின் முதுகெலும்பாகும்” என்று ஆவேசமாக பகிர்ந்துள்ளார்.

அம்பானியின் குடும்பத்திலிருந்து, பொதுமக்களுக்காக, இந்த மோடியின் யுகத்தில், ஒரு இளம் வாரிசு பொங்கியிருப்பது பல மட்டங்களிலும் ஆச்சர்யத்தைக் கிளப்பியுள்ளது.