புனே:

ந்தியாவில் அதிவேக பயணம் மேற்கொள்ளும் ஹைபர் லூப் போக்குவரத்து  முதன்முதலாக மும்பை – புனே இடையே தொடங்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல்லை இன்று பிரதமர் மோடி நாட்டுகிறார்.

இந்தியாவில் ஹைபர்லூப் போக்குவரத்து சேவையை செயல்படுத்த  இங்கிலாந்தைச் சேர்ந்த விர்ஜின் குரூப் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன்படி இன்று அதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்குகிறதுழ.

 

ஏற்கனவே துபாய் – அபுதாபி இடையே இந்த ஹைப்பர் லூப் போக்குவரத்துக்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவிலும் ஹைபர் லூப் போக்குவரத்தை செயல்படுத்த மத்திய அரசு முன்வந்துள்ளது.

“ஒரு குழாயினுள் உள்ள காந்தப்புலத்தினுள் மணிக்கு 1,200 கி.மீ வேகத்தில் மிதந்துசெல்லும் ஒரு வாகனப் பயணமே ஹைப்பர் லூப்’  எனப்படுகிறது.  இந்த புதிய தொழில்நுட்பம் விரைவில் இந்தியாவிலும் வர உள்ளது.

ஹைப்பர் லூப் சேவை தொடங்கினால் இரு நகரங்களுக்கிடையிலான 3 மணி நேர பயண தூரம் 20 நிமிடங்களாக குறையும் என்று கூறப்படுகிறது.

இதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்கட்டமாக  நவிமும்பை விமான நிலையம் முதல் மத்திய புனே வரை இணைக்கும் வகையிலான திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.  ஆனால், இந்த பணிக்காண செலவு விவரம் குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை.

ஹைப்பர் லூப் போக்குவரத்து என்றால் என்ன என்பது குறித்த செய்திக்கு கீழே உள்ள லிங்கை கிளிக்கவும்…

https://patrikai.com/renaissance-of-the-transports-high-speed-hyperlube-transport/