மும்பை:
ணியில் இருக்கும்போது அரசு ஊழியர் உயிரிழந்ததால், கருணை அடிப்படையில் அவரது ரத்த உறவுகளுக்கு அரசுப் பணி வழங்கும் திட்டத்தை மாநில அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
தற்போது, இந்த திட்டம், வகுப்பு சி மற்றும் டி ஊழியர்களுக்கு மட்டும் அமலில் உள்ளது. தற்போது அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து, இப்போது ஏ மற்றும் பி வகுப்பு ஊழியர்களுக்கும் இந்த திட்டம் நீடிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து வெளியான தகவலில், கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டு பி வகுப்பு அதிகாரிகள் பலர் உயிரிழந்துள்ளதை அடுத்து, பணியில் இருக்கும்போது அரசு ஊழியர் உயிரிழந்ததால், கருணை அடிப்படையில் அவரது ரத்த உறவுகளுக்கு அரசுப் பணி வழங்கும் திட்டத்தை அமல் படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஒப்புக் கொண்டதை அடுத்து,  இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது.