காபூல்

ந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் எனத் தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி வருவதால் தாலிபான்கள் ஆப்கானை கைபற்றி உள்ளனர்.  இதையொட்டி அதிபர் அஷ்ரஃப் கனி அந்நாட்டில் இருந்து வெளியேறினார்.  தாலிபான்கள் ஆப்கானில் ஆட்சி அமைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.   ஆனால் ஆப்கான் மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

சமீபத்தில் தாலிபான்கள் செய்தி தொடர்பாளர் சபுஹுல்லா செய்தியாளர்களிடம், “இந்தியா தனது கொள்கையை ஆப்கானிஸ்தான் மக்களின் நலன்களுக்கு ஏற்ப  வகுக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் ஆகும். எங்கள் நிலத்தை வெளிநாடுகளுக்கு எதிராக பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்பதை ஏற்கனவே தெரிவித்துள்ளோம்.

காஷ்மீர் பிரச்சினையை இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும். இந்தியா இவ்விகாரத்தை இந்தியா நேர்மறையாக அணுக வேண்டும்.  தாலிபான்கள் ஆப்கானைக் கைப்பற்றியதில் பாகிஸ்தானுடைய பங்கு எதுவும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.