டோக்கியோ: ஜப்பான தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் போட்டியில் விளையாடிய இந்திய வீராங்கனை பவினாபென் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் தொடரின் 4-வது நாளான நேற்று மகளிருக்கான டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெற்றது.  கிளாஸ் 4 பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் பவினாபென் படேல், பிரேசிலின் ஜாய்ஸ் டி ஆலிவியராவை எதிர்த்து விளையாடினார். இதில் பவினாபென் படேல் 12-10, 13-11, 11-6 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். தொடர்ந்து, மாலையில் நடைபெற்ற காலிறுதி போடியில்,  செர்பியாவின் போரிஸ்லாவா பெரிக் ராங்கோவிச்சை வென்று அரை இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.   இந்த போட்டியில் சீன வீராங்கனை  ஜாங் மியாவோவுடன் மோதுகிறார்.

அரை இறுதிக்கு முன்னேறியதன் மூலம் வெண்கலப் பதக்கத்தை பவினா பென் உறுதி செய்துள்ளார். இதில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு சென்றால், தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் பெற வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் பாராலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸில் பதக்கம் கைப்பற்றும் முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனைக்கு சொந்தமாகிறார் பவினா பெண்.