இங்கிலாந்து: 
கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் மேன்செஸ்டர் யுனைடட் அணியில் இணைந்துள்ளார்.
கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை மேன்செஸ்டர் யுனைடட் அணிக்காக 6 சீசனில் விளையாடிய ரொனால்டோ, 8 கோப்பைகளை வெல்ல உதவியுள்ளார். இவர் ஆடிய 292 ஆட்டங்களில் 118 கோல்கள் அடித்துள்ளார்.
இந்நிலையில், கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் மேன்செஸ்டர் யுனைடட் அணியில் இணைந்துள்ளதாக, மேன்செஸ்டர் யுனைடட் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,  நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ,  Juventus அணியிலிருந்து விலகி மீண்டும் மேன்செஸ்டர் யுனைடட் அணியில் இணைகிறார் என்றும், ரொனால்டோவை மேன்செஸ்டர் யுனைடட் அணி 25 மில்லியன் யூரோவுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.