கொரோனா தொற்று பரவல் தடுக்கும் நோக்குடன் ஊராடங்கு தளர்வை அறிவித்த மகாராஷ்டிரா அரசு சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளித்தது. அதில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் படப்பிடிப்பில் பங்கேற்க தடைவிதிக்கப் பட்டது. பின்னர் இந்த உத்தரவை எதிர்த்து கோட்டுக்கு சென்று தடை வாங்கப் பட்டது.
முன்னாதாக நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் குடும்பத்தினர் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைக்கு பிறகு மீண்டனர். அது தராத வேதனையை அரசின் உத்தரவு அமிதாப்பிற்கு ஏற்படுத்தி யது. அதுபற்றி அவர் கூறியதாவது:
65 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஷூட்டிங் கில் பங்கேற்கக் கூடாது என்ற அரசு விதித்த கண்டிஷன் என்னை மிகவும் பாதித்தது. அப்படியென்றால் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் வேலைக்கு செல்ல கூடாதா? அவர்கள் வேலை செய்ய லாயக்கு இல்லாதவர்கள் என்று அரசு முடிவு செய்ததா? எனக்கு 78 வயது ஆகிறது அப்படியென்றால் நான் சினிமா விலிருந்து வெளியேற வேண்டுமா? இந்த பிரச்னையை கோர்ட் தனது உத்தரவு மூலம் தீர்ந்து வைத்தது. கோர்ட்டு தடை யை நீக்குவதற்கு முன்பு என்னைப் போன்ற வயதானவர்கள் மனரீதியாக எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள்?
எனக்கு சினிமாதான் தொழில். நடிப்பை விட்டு நான் வேறு தொழில் செய்ய வழி இருந்தால் ஆலோசனை சொல்லுங்கள் கேட்போம்.
இவ்வாறு அமிதாப்பச்சன் கூறி உள்ளார்.