மும்பை: ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள குழந்தைகளுக்கான பவுடர் குறித்து ஏராளமான சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில்,  மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அந்நிறுவத்தில்ன் ஆலையில் குழந்தைகளுக்கான பவுடர் தயாரிப்பதற்கான லைசன்சை  மகாராஷ்டிரா அரசு அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.

ஜான்சன் அண்ட் ஜான்சன் என்றாலே குழந்தைகளுக்கான பவுடர், சோப்பு தயாரிப்பு நிறுவனம் என்பது அனைவரும் அறிந்தது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பன்னாட்டு மருந்து மற்றும் நுகர்வோர் சுகாதார பொருட்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்து வரும் இந்த நிறுவனம் 100 ஆண்டுகளை கடந்தது. இந்நிறுவனத்தின் தயாரிப்பான டால்கம் பேபி பவுடர் உலக அளவில் மிகவும் புகழ்பெற்றது. ஆனால், சமீப காலமாக இந்த பவுடர் குறித்து பல்வேறு சர்ச்சையைகள் எழுந்துள்ளன. இதன்மூலம் புற்றுநோய் ஏற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. பல வழக்குகளும் பதிவாகி உள்ளது. இதையடுத்து, 2023 முதல் அந்நிறுவனம் பவுடர் தயாரிப்பை நிறுத்தப்போவதாக அறிவித்து உள்ளது.

இந்நிறுவனத்தின் மாபெரும் ஆலை ஒன்று மகாராஷ்டிரா மாநிலத்திலும் செய்லபட்டு வருகிறது. தற்போது எழுந்துள்ள சர்ச்சைகளைத் தொடர்ந்து,  மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை  “ புனே மற்றும் நாசிக்கில் செயல்பட்டுவரும் ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்பின் மாதிரிகளை எடுத்து பரிசோதனை நடத்தியது. அதில்,  தரநிர்ணயித்துக்கு குறைவாக இருப்பதாக அறியவந்தது. இதையடுத்த, அந்நிறுவனத்தில் பவுடர் தயாரிப்புக்கு தடை விதிக்கப்பட்டு, அதற்கான லைசென்னைசயும் ரத்து செய்துள்ளது.

பரிசோதனையில், குழந்தைகளுக்கான பிஎச் பரிசோதனையிலும் தரம் போதுமானதாக இல்லை என்பதால் உற்பத்திக்கான லைசன்ஸை ரத்து செய்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் உள்ள மத்திய மருந்து பரிசோதனை மையம், அளித்த அறிக்கையில், “ ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான பவுடர் பிஹெச் மதிப்புக்கு இணையாக இல்லை. ஐஎஸ் 5339:2004 தரநிர்ணயத்துக்கு உட்பட்டு பவுடர் தயாரிப்பு இல்லை. இந்த பவுடரால் பச்சிளங்குழந்தைகள் உடலின் தோல் பாதிக்கப்படும் “ என்று தெரிவித்தது.

கொல்கத்தா ஆய்வகத்தின் அறிக்கையின் அடிப்படையில் மகாராஷ்டிராவில் செயல்படும் ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் தனது பவுடர் தயாரிப்பின் லைசன்ஸை உடனடியாக ரத்து செய்து மகாராஷ்டிரா அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.