டெல்லி: 18வது மக்களவை அமைப்பதற்கான லோக்சபா தேர்தலின் 4வது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இன்று காலை 11 மணி நிலவரப்படி  24.87% வாக்குப்பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

லோக்சபா தேர்தலின் 4வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு   இன்று 10 மாநிலங்களின் 96 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று   காலை 9மணி வர  10.35% வாக்குகள் பதிவாகி இருந்தது.

தற்போது காலை 11மணி வரை பதிவான வாக்குகளின் விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. அதன்படி,  தோராயமாக  24.87% வாக்குப்பதிவு ஆகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆந்திர மாநிலத்தில்  – 23.10% ,

பீகார் மாநிலத்தில் – 22.54%,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் – 14.94%

ஜார்கண்ட் மாநிலத்தில் – 27.40%,

மத்திய பிரதேசம் மாநிலத்தில் – 32.38%,

மகாராஷ்டிரா மாநிலத்தில் – 17.51%

ஒடிசா மாநிலத்தில் – 23.28%,

தெலங்கானா மாநிலத்தில் – 24.31%,

உத்தரபிரதேசம் மாநிலத்தில் – 27.12%,

மேற்குவங்கம்  மாநிலத்தில் – 32.78%