மும்பை:

3-வது முறையாக மகாராஷ்ட்ர முதல்வர் தேவேந்திர ஃபன்டவீஸ் தனது அமைச்சரவையை விஸ்தரித்துள்ளார்.


மும்பை பாஜக தலைவர் அஷிஸ் ஷெலார், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ண விக்கே பாட்டீல், சமீபத்தில் சிவசேனாவில் சேர்ந்த முன்னாள் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜாய்தத் ஷிர்ஷாகர் ஆகியயோர் கேபினட் அமைச்சர்களாக இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

மேலும் 4 ஜுனியர் அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

முன்னதாக, 5 அமைச்சர்களின் ராஜினாமாவை முதல்வர் ஃபட்னாவிஸ் ஏற்றுக் கொண்டார்.

சட்டப்பேரவை தேர்தலுக்கு 4 மாதங்களே இருக்கும் நிலையில், அமைச்சரவை விஸ்தரிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஃபட்னாவிஸ் தலைமையிலான பாஜக ஆட்சியில், 3-வது முறையாக அமைச்சரவை விஸ்தரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மும்பை பாஜக தலைவரான ஷெலார், மும்பை கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தவர்.2017-ம் ஆண்டு மும்பை மாநகராட்சியில் பாஜகவின் பலத்தை 33-லிருந்து 83-ஆக உயர்த்த காரணமாக இருந்தவர்.

இந்திய குடியரசுக் கட்சி(அத்வாலே) தலைவர் அவினாஷ் மகாட்கேர் முதல் முறையாக அமைச்சராகியுள்ளார். அத்வாலே மத்திய இணை அமைச்சராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

விக்கே பாட்டில், ஷிர்ஷாகர், மகாட்கர் ஆகியோர் தற்போது சட்டப் பேரவையிலோ அல்லது மேலவையிலோ உறுப்பினர்களாக இல்லை.

இவர்கள் 6 மாதம் வரை அமைச்சர்களாக தொடர முடியும். ஆனால், இன்னும் 4 மாதங்களில் மகாராஷ்ட்ர சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதால், இவர்கள் பதவிக்காலம் அதோடு முடிந்துவிடும்.