மும்பை

ரசு திட்டங்களை நிறைவேற்ற அரசிடம் நிதி இல்லாததால் உலக வங்கியின் உதவியை மகாராஷ்டிர அரசு நாடி உள்ளது.

பாஜக ஆளும் மகாராஷ்டிர அரசு விவசாயப் பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்தது.   ஆனல் அந்த நிதியை விவசாயிகள் கடன் தள்ளுபடிகாக அரசு மாற்றியது.   இது குறித்து அரசு உயர் அதிகாரிகள் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் இடம் எச்சரிக்கை விடுத்தனர்.   ஆயினும் வரப் போகும் தேர்தலை மனதில் கொண்டு அவர் கடன் தள்ளுபடி நடவடிக்கையை மேற்கொண்டார்.  இந்த நடவடிக்கையினால் விவசாயத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி மட்டும் இன்றி அரசின்  பல்வேறு திட்டங்களுகான நிதியும் மாற்றப்பட்டுள்ளது.

இதனால் மகாராஷ்டிரா அரசு கருவூலமே காலி ஆகி விட்டதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  அத்துடன்  தற்போது அரசின் விவசாய நல திட்டங்களும் மற்றும் கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களும் நிதி இல்லாததால் முடங்கிப் போய் உள்ளன.    இதில் விவசாய நல திட்டங்களுக்காக ரூ. 4000 கோடியும் கிராமப் புற வளர்ச்சி திட்டங்களுக்காக ரூ. 1250 கோடியும் தேவைப்படுகிறது.

இந்த திட்டங்களை நிதி உதவி கோரி உலக வங்கியை மகாராஷ்டிரா முதல்வர் அணுக உள்ளார்.    விரைவில் இது குறித்து முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் உலக வங்கித் தலைவரை சந்திக்க வாஷிங்டன் செல்ல உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.