உ.பி. மாநிலம் ப்ரயாக்ராஜ் நகரில் உள்ள திரிவேணி சங்கமத்த்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று புனித நீராடினார்.
முன்னதாக, உ.பி. வந்த ஜனாதிபதியை அம்மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல் மற்றும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்த்யநாத் ஆகியோர் வரவேற்றனர்.
ஜனாதிபதி முர்முவுடன் திரிவேணி சங்கமத்திற்கு முதல்வர் யோகி அழைத்துச் சென்ற நிலையில் பறவைகளுக்கு உணவளித்து கடமையை நிறைவேற்றினார் முர்மு.
பின்னர் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் இணையும் திரிவேணி சங்கமத்தில் நீராடி எழுந்த ஜனாதிபதி முர்மு இன்று நாள் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
புனித நீராடலை தொடர்ந்து திரிவேணி சங்கமத்தில் பூஜை செய்வார், பின்னர் ப்ரயாக்ராஜில், அக்ஷயவத் மற்றும் ஹனுமான் மந்திரில் பூஜை மற்றும் தரிசனம் செய்வார்.
மேலும் டிஜிட்டல் கும்ப அனுபவ மையத்தையும் பார்வையிடுவார் என்று ராஷ்டிரபதி பவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.