பாட்னா: பீகாரில் கடந்த பல ஆண்டுகளாக பாஜகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்து வந்த நிலையில், தற்போது, பாஜகவுடனான கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஐக்கிய ஜனதாதளம்  கட்சி தலைவர் நிதிஷ்குமார் அறிவித்து உள்ளார். அதைத்தொடர்ந்து இன்று  இன்று மாலை 4 மணிக்கு ஆளுநரை சந்திக்க உள்ளார்.
மத்திய பாஜக அரசுக்கு எதிராக மாநில கட்சிகள் ஒன்றுசேர்ந்து வருகின்றன. அதன்படி பீகாரில், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மகாபந்தன் கூட்டணி மீண்டும் உருவாகி உள்ளது.   இன்று நடைபெற்ற மகாகத்பந்தன் கூட்டத்தில், ஆர்ஜேடி எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள் மற்றும் ராஜ்யசபா எம்பி ஆகியோர் முடிவெடுக்க கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு அதிகாரம் அளித்து, தாங்கள் அவருடன் இருப்பதாக தெரிவித்தனர். இந்த கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் எம்எல்ஏக்கள் தேஜஸ்வி யாதவுடன் இருப்பதாக ஏற்கனவே கூறியுள்ளனர்.
இந்த நிலையில், நிதிஷ்குமார் கட்சியும் மகாபந்தன் கூட்டணியில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இன்று நடைபெற்ற நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் அனைத்து எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் முதல்வர் நிதிஷ் குமாரின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்து அவருடன் இருப்பதாக தெரிவித்தனர். அவர் என்ன முடிவெடுத்தாலும் தாங்கள் அவருடன் இருப்பதாக ஆதரவளித்தனர். ஆனால் சிலர் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவது சரியல்ல என அதிருப்தி தெரிவித்தனர். பல ஜேடி(யு) எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள், முதல்வர் நிதிஷ் குமாரிடம், தற்போதைய கூட்டணி 2020ல் இருந்து தங்களை பலவீனப்படுத்த முயற்சிப்ப தாகக் கூறினார்கள். சிராக் பாஸ்வானின் பெயரைக் குறிப்பிடாமல், அவர் ஒரு உதாரணம் என்றார்கள்;  இப்போது எச்சரிக்கையாக இல்லாவிட்டால், அது கட்சிக்கு நல்லதல்ல என்று  கூறினார்கள்
இதையடுத்து, பாஜகவுடனான கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து இன்று மாலை 4மணிக்கு மாநில ஆளுநரை சந்திக்க உள்ளார்.

வரும் 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. அதே ஆண்டு ஒடிசா மாநில சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. இதில் ஆட்சியை கைப்பற்ற லாலுவின் கட்சி முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதற்காக மகாபந்தன் கூட்டணியை மீண்டும் அமைத்து பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைத்து வருகிறது. இந்த கூட்டணியில் நிதிஷ்குமாரின் ஜேடியுவும் இணைய உள்ளது.

இந்த நிலையில்தான் ஒடிசா அரசியல் களம் பரபரப்பாக உள்ள நிலையில், அங்கு  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்றைய தினம் கட்டாக்கில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அமித்ஷா, தேசிய அளவில் ஒடிசா மாநிலத்திற்கு பெரிய அளவில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டின் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இங்கிருந்து தான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆர்.பி.ஐ கவர்னர் சக்திகாந்த மிஸ்ரா, மூன்று மத்திய அமைச்சர்கள் ஆகியோர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றார். பிரதமர் மோடி தேர்தல் வெற்றிகளில் புதிய சாதனை படைத்துள்ளார்.

வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை உடன் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும். பிரதமர் மோடி ஆட்சியில் தான் தலித்கள், பழங்குடியினர் அதிக அளவில் எம்.பிக்களாக இருந்துள்ளனர். பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 27பேர் எம்.பிக்களாக பதவி வகித்து வருவதாக தெரிவித்தவர்,  இந்தி பேசாத குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் ஆட்சி செய்து வருகிறது. அந்த வரிசையில் ஒடியா மொழி பேசும் ஒடிசா மாநிலத்திலும் பாஜக ஆட்சி விரைவில் அமையும் என்று கூறினார்.

ஒடிசா மாநிலத்தில் கடந்த 2000ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 5 முறை முதல்வராக, அசைக்க முடியாத தலைவராக நிதிஷ்குமார் இருந்து வருகிறார். அதனால் அங்கு பாஜகவின் பாச்சா எடுபடாது என கூறப்படுகிறது.

பீகார் மாநில எம்எல்ஏக்கள் விவரம்

பீகார் சட்டப்பேரவையில் 243 இடங்கள் உள்ளன. 1 இடம் காலியாக உள்ளது. பாஜகவிடம் 77 எம்எல்ஏக்கள் உள்ளனர். நிதிஷ் குமார் ஜேடியூ 45 எம்எல்ஏக்கள் உள்ளனர். தேஜஸ்வி பிரசாத் யாதவின் ஆர்ஜேடி 79, காங்கிரஸ் 19, சிபிஎம் 12, சிபிஐ 4, ஏஐஎம்ஐஎம் 1, சுயேட்சை 1 எம்எல்ஏ உள்ளனர். அங்கு பாஜக  ஜேடியு கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இன்று பாஜக கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதாதளம் விலகுவதால், ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால், மகாபந்தன் கூட்டணி ஆதரவில் அவரது ஆட்சி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.