சியான் விக்ரமுடன் முதல் முறையாக துருவ் விக்ரமும் இணைந்து நடிக்கும் படம் மகான். இந்த படத்தினை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கின்றனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் சிம்ரன்,பாபி சிம்ஹா,வாணி போஜன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில்நடித்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த படத்தில் துருவ் விக்ரமின் அறிவிப்பு வீடீயோவை படக்குழுவினர் வெளியிட்டனர்.

இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. தற்போது இந்த படத்தின் முதல் பாடல் வரும் 22ஆம் தேதி வெளியிடப்படும் என்ற அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சூறையாட்டம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பாடல் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.