ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் திரைப்படம் எனிமி.

இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், மிருணாளினி ரவி, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இதில் விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் வினோத் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார். படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், கலை இயக்குனராக டி.ராமலிங்கம் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்த படத்தின் விறுவிறுப்பான டீஸர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் அக்டோபர் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் லிட்டில் இந்தியா என்ற மூன்றவது பாடலை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.