அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ்.தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வளர்ந்து வரும் இளம் ஹீரோயினாக கவனம் பெற்றிருப்பவர் நந்திதா ஸ்வேதா.

சமூகவலைத்தளங்களில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் தனது புகைப்படங்கள் வீடியோக்கள் என்று ஏதேனும் ஒன்றை பகிர்ந்து வருவார்.

54 வயதான தனது தந்தை சிவசாமி உடல்நலக்குறைவால் காலமானார் என்ற கவலையான செய்தியை பகிர்ந்துள்ளார்.அவரது ஆத்மா சாந்தியடைய பல பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் இரங்கல்களை நந்திதாவின் குடும்பத்திற்கு தெரிவித்து வருகின்றனர்.