முதலில் மாட்டிறைச்சி, இப்போது ஆட்டிறைச்சிக்கும் தடையா ?
 ஆடுகள் போன்ற விலங்குகளை கால்நடைகள் படுகொலை மீதான தடையில் ஏன் சேர்க்கவில்லை என மகாராஷ்டிரா அரசிடம் கேட்டு, திங்களன்று மும்பை உயர் நீதிமன்றம் மாநிலத்திற்கு வெளியே படுகொலை செய்த மாடுகள் மற்றும் எருதுகளின் இறைச்சியை  இறக்குமதி செய்ய அனுமதிக்கலாம் என்று ஒரு உரிமம் கொள்கை மூலம் நிறைவேறியது.
mutton featured 1
டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள், வி.எம்.கனாடே மற்றும் ஏ.ஆர்.ஜோஷி  சமீபத்தில் திருத்தப்பட்ட மாடுகள், காளை போன்ற விலங்குகளின் இறைச்சியை உண்ணுவதையும் உரிமைக் கொள்வதையும் தடை செய்யும் மகாராஷ்டிரா விலங்கு பாதுகாத்தல் (திருத்தச்) சட்டத்தின் பிரிவு 5 (d) யின் கீழ் வரும் ஒதுக்கீட்டை எதிர்த்து உள்ள பல மனுக்களை விசாரித்தனர்.
mutton goat 1
இந்த மனுக்களின் படி, மகாராஷ்டிராவிற்கு வெளியே படுகொலை செய்யப்பட்டால் விலங்குகளின் இறைச்சியை  மாநிலத்திற்குள் அனுமதிக்க வேண்டும். “அரசு ஏன் மாடுகள், எருதுகள், காளைகள் போன்ற விலங்குகளை மட்டும் தடை செய்துள்ளது? ஆடு போன்ற மற்ற விலங்குகளின் நிலை என்ன?” என்று நீதிமன்ற பெஞ்ச்  கேட்டது.
 
இதற்கு பதிலளித்த அரசுத்தரப்பு  வழக்கறிஞர் சுனில் மனோகர், இதுகுறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகக் கூறினார்.
“இது வெறும் ஆரம்பம் தான் (மாடுகள், காளை, காளைகள் தடைசெய்வது). நாங்கள் மற்ற விலங்குகளைக் கொல்வதைத் தடை செய்வதைப் பற்றி பரிசீலிப்போம். இப்போதைக்கு, அரசு மாடுகள், காளை, காளைகள் ஆகியவற்றை பாதுகாப்பது அவசியம் என உணர்ந்துள்ளது,” என்று அவர் கூறினார்.
mutton 2
மாநிலத்திற்கு வெளியே கொலை செய்யப்படும் கால்நடைகளின் இறைச்சியை இறக்குமதி செய்ய அனுமதிக்க முடியும் என  அரசிடம் கொள்கை உரிமம் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் பரிந்துரைத்தது. “பிரிவு 5 (d) மாநிலத்திற்கு வெளியே மாடுகளை கொல்வதை தடை செய்யவில்லை. மாநிலத்திற்கு வெளியே கொலை செய்யப்படும் மாட்டிறைச்சியை உண்ணவோ உரிமைக் கொள்ளவோ கூடாதென ஒரு நபரை  ஏன் தடுக்க வேண்டும்? மறைமுகமாக நீங்கள் (அரசு) மாநிலத்திற்கு வெளியேயும் விலங்குகளைக் கொல்வதைத் தடை செய்கிறீர்கள்,” என்று நீதிபதி கனாடே கூறினார்.
 
மனுதாரர்களில் ஒருவர் சார்பாக தோன்றிய மூத்த வழக்கறிஞர் ஆஸ்பி சினாய், சட்டத்தின் பிரிவு 5 (d) தன்னிச்சையானது மற்றும் ஒரு குடிமகனின் அடிப்படை உரிமைக்கு எதிரானதாகவும் இருக்கிறது , மேலும் அச்சட்டத்தின் நோக்கம் மகாராஷ்டிராவிலுள்ள கால்நடைகளைப் பாதுகாப்பதாக இருந்தால், இறைச்சி இறக்குமதியை அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டார் இறைச்சி அனுமதிக்கப்பட . இந்தத் தடை குடிமகனின் வாழ்க்கையின் அடிப்படை உரிமையின் கீழ் வரும் சாப்பிடுவதற்கான உரிமையை மீறியுள்ளது இந்த மாட்டிறைச்சிக்கானத் தடை என்று மனுதாரர்கள் கூறியுள்ளனர்.
cow 1
எனினும் அட்வகேட் ஜெனரல் மனோகர் இதனை ஆட்சேபித்து,”மாநிலத்திற்குள் மாடுகளை கொலை செய்வது கொடுமை எனவும் மாநிலத்திற்கு வெளியே கொல்லலாம் எனவும் எப்படி அரசு கூற முடியும்? அதுவும் கொடுமைக்கு ஒப்பாகும். இச்சட்டம் தற்செயலாக இறக்குமதியையும் தடை செய்கிறது, ” என்று கேட்டார்.
இந்த மனுவிற்கு பதிலளித்து அதன் வாக்குமூலத்தை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் ஏப்ரல் 20 விசாரணையை பதிவிடவும் அரசுக்கு நீதிமன்ற அமர்வு  அறிவுறுத்தியுள்ளது.