நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளது.  இதையடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் உள்ள கெர்மடெக் தீவுகள் பகுதியில் இன்ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 10 கிமீ (6.21 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக USGS மேலும் கூறுகிறது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.

முன்னதாக அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு சில கடலோரப் பகுதிகளை ‘அபாயகரமான அலைகள்’ தாக்கும் என்று முன்னறிவிப்பு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.