மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிதி பங்களிப்பில் இயங்கிவரும் ஓபன் ஏ.ஐ.-ன் சாட் ஜிபிடி புதிய வெர்சன் நேற்று வெளியானது.

பள்ளி கல்லூரி மாணவர்கள் தங்களுக்கு தெரியாத மிகவும் கடினமான கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க சாட் ஜிபிடி-யை பயன்படுத்தி வருகின்றனர்.

சாட் ஜிபிடி-யை பயன்படுத்த தேர்வுகள் துறை மற்றும் முன்னணி பல்கலைக்கழங்கள் தடைவிதித்துள்ளது.

இந்த நிலையில் இதன் முன்னேறிய வெர்சன் ஜிபிடி4 நேற்று வெளியானது.

சாட் ஜிபிடி-யில் உள்ளிடும் வார்த்தை தொடர்பான அர்த்தம் மற்றும் தகவல்கள் சுமார் 3000 வார்த்தைகள் வரை இதில் பார்க்க முடிந்தது.

தற்போது வெளியாகியுள்ள ஜிபிடி4 மூலம் 8 மடங்கு அதிகமாக அதாவது சுமார் 25000 வார்த்தைகள் வரை நமது கேள்விக்கான விடை கிடைக்கிறது.

தவிர கையால் எழுதப்பட்ட வரிகளுக்கான விடையையும் ஜிபிடி4 பயன்படுத்தி பெறமுடியும்.

உதாரணத்துக்கு கோதுமை மாவு என்று ஒரு தாளில் எழுதி ஸ்கேன் செய்து விடையை தேடினால், அது கோதுமை மாவு என்றால் என்ன என்பதில் துவங்கி இதைக் கொண்டு செய்யக்கூடிய உணவு வகைகள் வரை அனைத்தையும் விடையாக அளிக்கிறது.

மேலும், கோதுமை குறித்த படத்தை ஸ்கேன் செய்தாலும் விடை கிடைக்கிறது.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு பதிவுகள் வெளியாகி வருகிறது.

கையெழுத்து பிரதியைக் கொண்டு இணையதளத்தைக் கூட உருவாக்க ஜிபிடி4 உதவுவதாகக் கூறப்படுகிறது. இதனால் வெப்சைட் டிசைனர்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.

இருந்தபோதும் இந்த செயல்பாடுகள் பலவும் ஜிபிடி4 பிரீமியம் பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.