கலிபோர்னியா: பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவில் இருந்து 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், புதிதாக தேர்வு செய்யப்பட இருந்த 5000 வேலை வாய்ப்புகளும் தற்போது நிரப்ப போவதில்லை எனவும் மெட்டா அறிவித்துள்ளது.

இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள மார்க் ஜீக்கர்பெர்க், “இது மிகவும் கடினமான ஒன்று ஆனால் இதைத் தவிர வேறு வழியில்லை. அடுத்த இரண்டு மாதங்களில் மெட்டா நிறுவனத்தில் இருந்து மேலும் சிலர் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.

குறைந்த முன்னுரிமைத் திட்டங்களை ரத்து செய்தல் மற்றும் புதிதாக பணியமர்த்தல் விகிதங்களைக் குறைத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் மறுசீரமைப்புத் திட்டங்களை நிறுவன தலைவர்கள் அறிவிப்பார்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே 11000 பேரை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்து நான்கு மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில் தற்போது புதிதாக 10000 பேர் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்ற அறிவிப்பு பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸாப் ஆகிய மெட்டா நிறுவன ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.