தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜா தனது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறி ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

1982 ம் ஆண்டு வெளியான சகலகலா வல்லவன் படத்தில் இடம் பெற்ற இளமை இதோ இதோ பாடலை பாடி வெளியிட்டுள்ள அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டு புத்தாண்டின் போதும் ஒளிபரப்பாகும் ‘விஷ் யூ ஹாப்பி நியூ இயர்’ என்று கமலஹாசன் பைக்கில் இருந்தபடி பாடும் இந்த பாடலை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்ததோடு அதை ட்ரோல் செய்தும் வந்தனர்.

பல படங்களுக்கு தன் பின்னணி இசைமூலம் உயிரூட்டிய இசைஞானி இளையராஜா காரில் அமர்ந்து கொண்டு தான் இசையமைத்த இந்த பாடலை பாடியிருப்பதோடு ‘இது எப்படி இருக்கு’ என்றும் ரசிகர்களை புத்தாண்டு உற்ச்சாகத்தில் அதிரவைத்துள்ளார்.