மதுரை:

லக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் கடந்த 2ந்தேதி இரவு தீ பிடித்தது. இதன் காரணமாக கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்ற இந்து சமய அறநிலையத்துறை நோட்டீஸ் கொடுத்தது.

இந்நிலையில், இது தொடர்பான வழக்கில்,  மதுரை ஐகோர்ட்டு கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நாளை மதியம் 12 மணிக்குள் அனைத்து கடைகளையும் அகற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்கு வாசல் பகுதியில் உள்ள கடைகளில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக கோலின் கூரை மற்றும் அருகிலிருந்த ஆயிரம்கால் மண்டபம் உள்பட பல பகுதிகள் சேதமடைந்தன.

இந்த தீ விபத்து நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்த தீ விபத்துக்குழு ஆராய தமிழக அரசு குழு அமைத்தது. அந்த குழுவினர் தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர். இந்நிலையில், கோவிலில் உள்ள கடைகளை உடனே அகற்ற வேண்டும் என்று இந்து அறநிலையத்துறை சார்பாக வணிகர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதை எதிர்த்து கோவில் வளாகத்தில் உள்ள வணிகர்கள் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்டு கிளை, மீனாட்சி அம்மன்  கோயில் வளாகத்தில் செயல்படும் 115 கடைகளை நாளை (பிப்.,9) நண்பகல் 12 மணிக்குள் அகற்ற வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டது.

மேலும், கடையின்  உரிமையாளர்கள், தங்களது பொருட்களை கோயில் நிர்வாகம் குறிப்பிடும் இடத்தில் தற்காலிகமாக  வைக்க வேண்டும் என்றும், அதை 3 வாரத்திற்குள் அங்கிருந்து அகற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதன் காரணமாக கோவில் வளாகத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.