மதுரை.
ங்கியில் பணம் எடுக்க காத்திருந்தவர் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். பணம் மாற்றும் விவகாரம் காரணமாகவும், பணம் எடுக்க காத்திருப்பது காரணமாகம் இதுவரை நூற்றுக்கணக்கானோர் மரணத்தை தழுவி உள்ளனர்.
மதுரை பழங்காநத்தம் பேருந்து நிலையம் அருகே உள்ள கனரா வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பதற்காக இன்று காலை நடுத்தர வயதுள்ளவர் ஒருவர் வந்தார்.
கடந்த மாதம் 8ந்தேதி ரூபாய் செல்லாது என்று மோடி அறிவித்த பிறகு, நாட்டில் பணத்தட்டுப்பாடு அதிகரித்து உள்ளது. மக்கள் அன்றாட தேவைக்கே பணம் இல்லாமல் அல்லாடி வருகின்றனர். இதன் காரணமாக முதியவர்கள் முதல் நடுத்தர வயதினர் வரை நூற்றுக்கணக்கானோர்  காத்திருந்து காத்திருந்து மரணத்தைதான் பெற்றுள்ளனர்.
dead
இன்று காலை மதுரை அருகே பணம் எடுக்க காத்திருந்த அண்ணாமலை என்பவர் நெஞ்சுவலி காரணமாக சுருண்டு விழுந்து இறந்தார். பணம்  எடுக்க நெடுநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்ட நேரத்தில் நெஞ்சு வலி ஏற்பட்டு அதே இடத்தில் சுருண்டு விழுந்து இறந்தார்.
விசாரணையில் அவரது பெயர் அண்ணாமலை என்றும், வயது 45தான் ஆகிறது என்றும் தெரியவந்துள்ளது. பணம் எடுக்க காத்திருந்த வேளையில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்த செய்த அந்த பகுதியில் பரபரப்பையும், அவரது குடும்பத்தாருக்கு மிகுந்த வேதனையுயம் கொடுத்துள்ளது.