Skip to content
  • Thu. Sep 24th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

மோடி பாராட்டிய மதுரை சலூன்கடைக்காரரின் மகள் ஐ.நா.சபை நல்லெண்ண தூதராக தேர்வு…

Jun 5, 2020

ஜெனிவா:

கொரோனா ஊரடங்கின்போது உதவி புரிந்து, பிரதமர் மோடியால்  பாராட்டுப்பெற்ற  மதுரை சலூன்கடைக்காரர் மோகனின்  மகள் நேத்ரா ஐ.நா.சபையின்  நல்லெண்ண தூதராக  தேர்வாகியுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

கொரேனா வைரஸ் தொற்று இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளை மிரட்டி வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் இந்தியா உள்பட உலக நாடுகள், பொது முடக்கத்தை அறிவித்து வருகின்றன. இதனால் உலக பொருளாதாரம் சீர் குலைந்துபோய் உள்ளது.

இந்தியாவிலும் கடந்த மார்ச் 24ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால், தினக்ககூலிகள் முதல் தொழில் முதலைகள் வரை அனைத்தும் தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் கொரோனா  ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு,  மதுரை  மேலமடை பகுதியைச் சேர்ந்த சலூன் கடைக்காரர்  மோகன், தனது மகளின் மேற்படிப்புக்காக சேர்த்து வைத்திருந்த ரூ.5 லட்சம் பணத்தை, ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 கிலோ அரசி, காய்கறிகள், பலசரக்கு சாமான்கள் மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றை வழங்கி  மகிழ்ந்தார். சுமார் 615 குடும்பத்தினருக்கு அவர்கள் உதவியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான தகவல் பிரதமர் மோடிக்கு தெரியப்படுத்தப்பட்டது. அவரும் கடந்த வாரம் வானொலி உரையான மான்கிபாத் நிகழ்ச்சியில் மோகனையும், அவரது குடும்பத்தினரையும் பாராட்டினார்.

கள் படிப்புக்காக வைத்திருந்த ஐந்து லட்சம் ரூபாய் பணத்தில் மக்களுக்கு உதவிய மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார்.
பெற்றோருடன் நேத்ரா

இந்த நிலையில் ஐ.நா.நல்லெண்ண தூதராக மதுரை சலூன்கடைக்காரரின் மகளான மாணவி நேத்ரா தேர்வாகியுள்ளார். நியூயார்க் மற்றும் ஜெனிவாவில் நடக்கும் கூட்டத்தில் பேசவும் நேத்ராவுக்கு ஐ.நா.அழைப்பு விடுத்துள்ளது.  இந்த தகவலை மோகன் தெரிவித்து உள்ளர்.

ஐ.நா.வின் (வளர்ச்சி மற்றும் அமைதிக்கான) அவை சார்பாக ஏழை மக்களின் நல்லெண்ண தூதராக அறிவிப்பட்டுள்ள நேத்ராவுக்கு  ரூபாய் 1 லட்சம் ஊக்கத்தொகையும் ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மாநாட்டில் வறுமை தொடர்பாக பேசவும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

மோகனின் மகள் நேத்ரா, தற்போது ஒன்பதாவது வகுப்பு படித்து வருகிறார். ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் படித்து வருவதாக அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில்,  தனது படிப்புக்காக சேமித்து வைத்திருந்த ரூ.5 லட்சத்தை ஏழைகளுக்காக நேத்ரா வழங்கியதை பாராட்டி  ஐ.நா. கவுரவத்தை வழங்கி உள்ளது.

Post navigation

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.26 லட்சத்தை தாண்டியது
05/06/2020: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.26 லட்சமாக உயர்வு… 24 மணி நேரத்தில் 9851

Related Post

News

SIR: பாரத ரத்னா பேராசிரியர் சி.என்.ஆர். ராவுக்கு பெயர் முரண்பாடு தொடர்பாக நோட்டீஸ்

News இந்தியா

டெல்லியில் அதிர்ச்சி: 16 வயது மாணவிக்கு ஓடும் ஸ்லீப்பர் பேருந்தில் பாலியல் வன்கொடுமை

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer