Skip to content
  • Thu. Sep 24th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

05/06/2020: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.26 லட்சமாக உயர்வு… 24 மணி நேரத்தில் 9851

Jun 5, 2020

டெல்லி:

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 9851 பேர்  கொரோனா தொற்றால் பாதிக்கப்ட்டதைத் தொடர்ந்து மொத்த  எண்ணிக்கை 2.26 லட்சமாக உயர்ந்துள்ளது என இந்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று தமிழகம், மகாராஷ்டிரா உள்பட சில மாநிலங்களில் தீவிரமாக  பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த 5வது கட்டமாக பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு  ஜூன் 30 வரை  நீட்டிக்கப்பட்டுள்ளது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கொரோனா தொற்று பரவலும் தீவிரமடைந்துள்ளது.

இந் நிலையில், இந்தியாவில் கொரோனா தாக்கம் குறித்து  இன்று 05/06/2020:) காலை 10 மணி அளவில்  மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது,
இந்தியாவில் இதுவரை  2லட்சத்து 26ஆயிரத்து 770  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 9851 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடநத 24 மணி நேரத்தில் 273 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா பலி எண்ணிக்கை 6348 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 109462 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 110960 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 77 ஆயிரத்தை தாண்டியது. மொத்தம் 77793 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 27256 பேருக்கும், டெல்லியில் 25004  பேருக்கும்,
குஜராத்தில் 18584 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 43,86,376 மாதிரிகள் தற்போது சோதனை செய்யப்பட்டுள்ளன, அவற்றில் 1,43,661 மாதிரிகள் கடந்த 24 மணி நேரத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளன என  ஐ.சி.எம்.ஆர் (இந்திய மருத்துவ கவுன்சில) தகவல் தெரிவித்து உள்ளது.

Post navigation

மோடி பாராட்டிய மதுரை சலூன்கடைக்காரரின் மகள் ஐ.நா.சபை நல்லெண்ண தூதராக தேர்வு…
மின் கட்டணத்தில் பகல் கொள்ளை… நுகர்வோர்கள் கொந்தளிப்பு… சலுகை வழங்க ஸ்டாலின் வேண்டுகோள்…

Related Post

News

SIR: பாரத ரத்னா பேராசிரியர் சி.என்.ஆர். ராவுக்கு பெயர் முரண்பாடு தொடர்பாக நோட்டீஸ்

News இந்தியா

டெல்லியில் அதிர்ச்சி: 16 வயது மாணவிக்கு ஓடும் ஸ்லீப்பர் பேருந்தில் பாலியல் வன்கொடுமை

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer