இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.26 லட்சத்தை தாண்டியது

Must read

டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,26,713 ஆக உயர்ந்து 6363 பேர் மரணம் அடைந்துள்ளனர்

 

நேற்று இந்தியாவில் 9899 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 2,26,713 ஆகி உள்ளது.  நேற்று 275 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 6363 ஆகி உள்ளது.  நேற்று 4389  பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,08,450 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,11,888 பேராக உள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 2963 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 77,793 ஆகி உள்ளது  நேற்று 123 பேர் உயிர் இழந்து மொத்தம் 2710 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1352 பேர் குணமடைந்து மொத்தம் 33,681 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1384 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 27,256 ஆகி உள்ளது  இதில் நேற்று 15 பேர் உயிர் இழந்து மொத்தம் 223 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 585 பேர் குணமடைந்து மொத்தம் 14901  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

டில்லியில் நேற்று 1359 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 25,004 ஆகி உள்ளது.  நேற்று 44 பேர் மரணம் அடைந்து  இதுவரை மொத்தம் 659 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 356 பேர் குணமடைந்து மொத்தம் 9898 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் நேற்று 492 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 18,609 ஆகி உள்ளது  இதில் நேற்று 33 பேர் உயிர் இழந்து மொத்தம் 1155 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 455 பேர் குணமடைந்து மொத்தம் 12,667 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று 210 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,862 ஆகி உள்ளது  இதில் நேற்று 4 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 213 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 360 பேர் குணமடைந்து மொத்தம் 7104 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இந்தியாவில் தற்போது அந்தமான் நிகோபார் தீவுகள் பகுதி மட்டும் கொரோனா பாதிப்பற்ற மாநிலமாக உள்ளது.

More articles

Latest article